நீலக்கல் என்று அழைக்கப்படும் "ப்ளூ சஃபயர்' என்பது சனியின் ரத்தினம்.
ஒருவர் ஜாதகத்தில் சனி சரியில்லாம லிருந்தால், அவருக்கு காலில் நோய், மூட்டுவலி ஏற்படும். "ஆர்த்ரைட்டிஸ்' நோய் உண்டாகும். அடிக்கடி உடலில் காயம் உண்டாகும். ரத்தக் குறைவு, வாய்வுத் தொல்லை, கை- கால்களில் வேதனை, பக்கவாதம், தலையில் முடி உதிர்தல், மந்த நிலை, இதய நோய் ஆகியவை உண்டாகும்.
ஒரு ஜாதகத்தில் சனி உச்சமாக அல்லது நல்ல நிலையில் இருந்தால், அவர் பூமிக்கு அதிபதியாக இருப்பார். பணிபுரிய நிறைய மனிதர்களை வைத்திருப்பார். கல் வியாபாரியாக இருப்பார். அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பார். அறிவியல் அறிஞர், மொழிபெயர்ப்பாளர், வழிகாட்டி, காசாளர், கட்டடக் கலை நிபுணர், கான்ட்ராக்டர், விலைமதிப்புள்ள இயந்திரங்களை விற்பவர், சங்கத் தலைவர், தோல், இரும்பு, சிமெண்ட், பெட்ரோல் வியாபாரி, துணி தைப்பவர், நெசவாளர், நர்ஸ், கெமிக்கல் எஞ்ஜினியர்- இப்படி பல துறைகளிலும் அவர்கள் இருப்பார்கள்.
சனி லக்னத்தில் நல்ல நிலைமையில் இல்லாமலிருந்தால் அல்லது நீசமாகவோ அஸ்தமனமாகவோ இருந்தால் திருமணத் தடை உண்டாகும். உடலில் பிரச்சினை ஏற்படும். பலருக்கு தலையில் "மைக்ரேன்' என்ற நோய் வரும். சனி 2-ஆவது இடத்தில் இருந்து அதை குரு பார்த்தால் அவர்கள் புகழுடன் இருப் பார்கள். ஆனால், 2-ஆம் பாவத்தில் சனி பலவீனமாக அல்லது ராகு, செவ்வாயுடன் இருந்தாலும், அல்லது சனி, சூரியன், செவ்வாய் 2-ல் இருந்தாலும் அவருக்கு இல்வாழ்க்கையில் பல பிரச்சினைகள் உண்டாகும். தாய்- மகன் உறவு, கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. சிலர் பேசும்போது திக்குவார்கள். வேலைகளில் தடைகள் ஏற்படும்.
3-ஆவது பாவத்தில் சனி இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். உணவை ரசித்து சாப்பிடுவார். உணவு சரியில்லையென்றால் வீட்டில் சண்டை போடுவார். 3-ஆவது பாவத்தில் சனி, ராகு அல்லது சனி, சுக்கிரன், ராகு அல்லது சனி, சூரியன், ராகு அல்லது சனி, செவ்வாய், சூரியன் இருந்தால், அவருக்கு தம்பி, தங்கையுடன் பிரச்சினை இருக்கும். வீட்டில் சந்தோஷம் இருக்காது.
4-ஆவது பாவத்தில் சனி இருந்தால், ஜாதகரின் தாய்க்கு பிரச்சினை உண்டாகும். சனி, சூரியன் அல்லது சனி, சூரியன், செவ்வாய் இருந்தால், கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. திருமணத்தில் பிரச்சினை உண்டாகும்.
5-ஆவது பாவத்தில் சனி இருந்தால், சிலருக்கு பெண் குழந்தைகள் அதிகமாக இருக்கும். சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். 5-ல் சனி, செவ்வாய், சூரியன் இருந்தால், பெண்ணின் கர்ப்பப் பையில் பிரச்சினை, ஆண்களுக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும்.
6-ஆவது இடத்தில் சனி இருந்தால், பலருக்கு முதுகுத்தண்டில் தொல்லைகள் இருக்கும். சிலருக்கு பித்த நோய் இருக்கும். சனி, ராகுவுடன் இருந்தால் நண்பர்கள் ஏமாற்றுவார்கள். சனி, ராகு, செவ்வாய் அல்லது சனி, சூரியன், செவ்வாய் 6-ல் இருந் தால் சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும்.
7-ஆவது பாவத்தில் சனி இருந்தால் திருமணத்தடை ஏற்படும். மனைவிக்கு வயிறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். சனியுடன் செவ்வாய் சேர்ந்திருந்தாலும் திருமணத்தில் தடை இருக்கும். சனி, சூரியன், ராகு சேர்ந் திருந்தால் திருமணத்தில் பிரச்சினை வரும்.
8-ஆவது இடத்தில் சனி தனித்திருந்தால், அவருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். ஆனால் சனி, சந்திரன், புதன் சேர்ந்திருந்தால், அவருக்கு மனநோய் ஏற்படும். ரத்த அழுத்தம் இருக்கும். சனி, செவ்வாய், ராகு சேர்ந்திருந்தால் இல்வாழ்க்கையில் பிரச்சினை உண்டாகும். சிலருக்கு இரண்டு திருமணங்கள் நடக்கும்.
சனி, செவ்வாய், சுக்கிரன் சேர்ந்திருந்தால் கண்ணில் நோய் ஏற்படும். ஆணாக இருந் தால் மனைவிதவிர வேறு பெண்ணுடன் பழகுவார்கள். பெண்ணாக இருந்தால் கணவன்தவிர வேறு ஆணுடன் பழகுவார்கள்.
9-ஆவது பாவத்தில் சனி இருந்தால் கடுமையாக உழைப்பார்கள். தந்தையுடன் பிரச்சினை இருக்கும். சனி, சூரியனுடன் இருந்தால் தந்தை- மகன் உறவு சரியாக இருக்காது.
சனி, சூரியன், செவ்வாய் அல்லது சனி, சூரியன், குரு இருந்தால், 36 வயதிற்குப் பிறகு நல்ல வாழ்க்கை அமையும்.
10-ஆவது பாவத்தில் சனி இருந்தால் "சக்ரபங்க் யோகம்' உண்டாகும். அதனால் இளம்வயதில் பல கஷ்டங்களைச் சந்திப் பார்கள். 45 வயதிற்குப் பிறகு சந்தோஷமாக வாழ்வார்கள். பலர் உயர்பதவியில் இருப் பார்கள். சனி, செவ்வாய், ராகு சேர்ந்திருந்தால் பலரிடமும் ஏமாறுவார்கள்.
11-ஆவது பாவத்தில் சனி இருந்து ஜாத கருக்கு சனி தசை நடந்தால், அந்த சனி, யோகக்காரகனாக இருந்தால், அவர் நிறைய பணம் சம்பாதிப்பார். சனி, பாதகாதிபதியாக இருந்தால் காலில் நோய் ஏற்படும். பணச் சிக்கல் உண்டாகும். மூலநோய் வரும். சனி, செவ்வாய், ராகு சேர்ந்திருந்தால், வயிறு சம்பந் தப்பட்ட பிரச்சினை உண்டாகும். பெண்ணின் கர்ப்பப் பையில் பிரச்சினை உண்டாகும்.
12-ஆவது பாவத்தில் சனி இருந்தால், இளம்வயதில் அலைச்சல்கள் இருக்கும். சனி, ராகுவுடன் இருந்தால் வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும். சனி, சந்திரனுடன் இருந்தால் தூக்கம் சரியாக வராது. சனி, சூரியன், சந்திரன் சேர்ந்திருந்தால் பித்ரு தோஷம் உண்டாகும். பணக்கஷ்டம் இருக்கும். தந்தை- மகன் உறவு சரியாக இருக்காது. சனி, செவ்வாயுடன் இருந் தால், கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. சிலர் மனைவியிடமிருந்து பிரிந்துவிடுவார்கள்.
மேற்கண்ட கிரக அமைப்பால் தொல்லை களை சந்திப்பவர்கள் அதிலிருந்து விடுபட நீலம் அணியவேண்டும்.
நீலம் அணிய வேண்டியவர்கள் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னத்தில் பிறந்தவர்கள் நீலம் அணிந்தால் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ்வார்கள்.
செல்: 98401 11534